×

துப்பு துலக்குமா?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இந்த வழக்கு சிபிசிஐடி, விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி, ஏடிஎஸ்பி, முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆத்தூரில் இருந்து சேலம் – சென்னை புறவழிச்சாலை செல்லும் வழியில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன? என சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியளாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ம் ஆண்டு சந்தனகிரி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை நடந்த சில நாட்களிலேயே கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்தபோது இருவழிப்பாதையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 4 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. கனகராஜ் உயிரிழந்த சில மணி நேரத்தில் வேகத்தடையால் தவறி விழுந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துப்பு துலக்குமா?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : CPCIT ,Kodanadu ,Nilgiri ,Nilgiri District ,Kothagiri ,CPCID ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...