சென்னை : கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அகில இந்திய வானொலியில் இந்தி ஆதிக்கம் செலுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,
“அகில இந்திய வானொலியின்
தமிழ் நிலையங்கள்
பல கலைஞர்கள்
தமிழ் விளைத்த கழனிகளாகும்;
கலைக்கும் அறிவுக்குமான
ஒலி நூலகங்களாகும்
அங்கே தமிழ் மொழி
நிகழ்ச்சிகள் குறைந்து
இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது
மீன்கள் துள்ளிய குளத்தில்
பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்
கண்டிக்கிறோம்
இந்தி அகலாவிடில்
அல்லது குறையாவிடில்
தமிழ் உணர்வாளர்கள்
வானொலி வாசலில்
களமிறங்குவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
The post இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில் தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் : கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.
