×

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு!

தென்காசி : தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவபத்மநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தென்காசி தெற்கு மாவட்டக் கழக செயலாளராகப் பணியாற்றி வரும் பொ. சிவபத்மநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தெதன்காசி மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : South Kasi ,Dizhagam Southern District ,Secretary General ,Thuraimurugan ,Tengkasi ,Shivapathmanathana ,Thengasi ,Dizhagam ,Southern District ,General Secretary ,Dinakaran ,
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...