×

மது விற்ற நபர் கைது

 

இடைப்பாடி, ஜூலை 26: கொங்கணாபுரம் எட்டிக்குட்டைமேடு பகுதியில், டூவீலரில் வைத்து கொண்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, சங்ககிரி டிஎஸ்பி ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், கொங்கணாபுரம் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது டூவீலரில் வைத்து மது விற்ற, எட்டிகுட்டை மேடு கோணங்கையூர் பகுதியை சேர்ந்த சண்முகம்(55) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ethippadi ,Sangakiri DSP ,Ettikuttaimedu ,Konganapuram ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி