×

நிலக்கோட்டை பள்ளபட்டியில் தென்மாவட்ட கபடியில் தேவாரம் அணி வெற்றி

நிலக்கோட்டை, ஜூலை 26: நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக மின்னொளியில் கபடி போட்டி நடந்தது. தென்மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் முறையில் நடந்தது. இறுதி போட்டியில் தேனி மாவட்டம், தேவாரம் அணியும், திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் முடிவில் 7 புள்ளி வித்தியாசத்தில் தேவாரம் அணி கோப்பையை வென்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், கவுன்சிலர்கள் தியாகு, காளிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் சதீஷ்குமார், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கர்ணன், பிஎம்கே கபடி குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். போட்டியை கபடி ரசிகர்கள், பொதுமக்கள் கண்டுரசித்தனர்.

The post நிலக்கோட்டை பள்ளபட்டியில் தென்மாவட்ட கபடியில் தேவாரம் அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Devaram ,South District Kabaddi ,Nilakottai Pallapatti ,Nilakottai ,Pallapatti ,DMK South Union ,
× RELATED தேவாரம் பகுதிகளில் புதிய வாக்காளர்...