×

மேட்டுக்கடையில் இன்று மின் தடை

 

ஈரோடு, ஜூலை 26: ஈரோடு அடுத்துள்ள சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்கம்பாளையம் மின்பாதையில் உயரழுத்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (26ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொங்குநகர், கள்ளன்கரடு, எல்லப்பாளையம், பெரியசேமூர், சின்னசேமூர், ராசிகார்டன், வேலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து இன்று 26ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொட்டிபாளையம், ஸ்ரீகார்டன்,செந்தூர் கார்டன், காசிகாடு, லட்சுமி கார்டன், பிளாஷிங் அவென்யூ பகுதி, காரமடை, வேட்டுவபாளையம், அம்மன் நகர், பள்ளத்தூர், பள்ளிபாளையம், ஒண்டிக்காரன்பாளையம், புதுவலசு, ஜஸ்வர்யா பார்க்கிங் பகுதி, சாணார்பாளையம், வில்லரசம்பட்டி, சன் கார்டன் பகுதி, நெடுஞ்சாலை நகர், செம்மாம்பாளையம், மஞ்சள் வணிக வளாகம், வில்லரசம்பட்டி நால் ரோடு பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மேட்டுக்கடையில் இன்று மின் தடை appeared first on Dinakaran.

Tags : Mettukada ,Erode ,Manikampalayam ,Suryampalayam ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனம் மோதி டெய்லர் பலி