×

தனியார் விடுதி கட்டணத்தில் பெண் வார்டன் ரூ.31 லட்சம் மோசடி

 

கோவை, ஜூலை 26: கோவை சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் உள்பட பெண்கள் பலர் தங்கியுள்ளனர். இந்த விடுதியின் வார்டன் உடையாம்பாளையத்தை சேர்ந்த சுகிர்தா(30). இவரது கணவர் ஜெயக்குமார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை வார்டன் சுகிர்தா நேரடியாக பெற்று அலுவலக கணக்கில் பதிவு செய்யாமல், ஜி-பே மூலம் வசூலித்துள்ளார். மேலும், வசூலித்த தொகையை அலுவலகத்துக்கு தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டண விவகாரம் தொடர்பாக உரிமையாளர் ஆய்வு செய்த போது மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் பணத்தை கட்டணமாக அளித்த மாணவிகள் சார்பில் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாணவிகள், பெண்களிடம் தங்கும் விடுதிக்கான கட்டணமாக ரூ.31 லட்சம் வரை பெற்று மோசடி செய்து உள்ளதாகவும், இது தொடர்பாக வார்டன் சுகிர்தா, அவரது கணவர் ஜெயக்குமார், நண்பர் பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பன்னிமடையை சேர்ந்த பிரபுவை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுகிர்தா, ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தனியார் விடுதி கட்டணத்தில் பெண் வார்டன் ரூ.31 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Saravanampatti ,Dudiyalur.… ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு