×

நெல்லை டவுன் பகுதியில் ஆற்றுநீரில் ரசாயனங்கள் கலப்பதை தடுக்க நடவடிக்கை

நெல்லை, ஜூலை 26: நெல்லை டவுன் பகுதியில் ஆற்றுநீரில் ரசாயனங்கள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாளையில் கோயில்களை சுற்றி காணப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் நேற்று நடந்த மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் பிஎம் சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர். ராஜூ, துணை ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற மக்கள், குறைகள், கோரிக்கைகளை குறித்து மேயரிடம் மனுக்கள் அளித்தனர். நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெரு மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. எனவே மழைக்காலங்களில் மழை நீர் சாலையில் ஓடுவதால் கவுன்சிலர்களிடம் முறையிட்டோம். அவரது ஏற்பாட்டின் பேரில் மழைநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் வேலையை தற்போது பாதியில் நிறுத்திவிட்டனர். எனவே மழைக்காலத்திற்கு முன்பாக வடிகால் வசதி செய்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே நெல்லை மாநகராட்சி 15வது வார்டு மக்கள் அளித்துள்ள மனுவில் கண்டியப்பேரி நியூ காலனி வெள்ளக்கோயில் தெருவில் சரியாக குடிநீர் வருவதில்லை. எனவே கள ஆய்வு மேற்கொண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் கருப்பந்துறை மக்கள் தங்கள் பகுதிக்கு 6 மாதங்களாக குடிநீர் முறையாக வருவதில்லை என்று கூறி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து டவுன் பாட்டப்பத்து பகுதி மக்கள் தாமிரபரணி நதிநீரில் ரசாயனங்கள் கலப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். இதனிடையே பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுவாமி சுப்பிரமணியன் அளித்துள்ள மனுவில் பாளை 33வது வார்டில் சுந்தர விநாயகர் ஆலயம், திருநீலகண்ட விநாயகர் ஆலயம், சங்கிலி பூதத்தார் ஆலயம் ஆகியவற்றின் அருகே மாநகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டியை வைத்துள்ளது. மேலும் குப்பை சேகரிக்கும் 3 சக்கர வண்டிகள் வேறு இடமின்றி அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோயிலின் சுற்றுப்புறங்கள் மாசுபட்டுள்ளன. எனவே அவற்றை சீரமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post நெல்லை டவுன் பகுதியில் ஆற்றுநீரில் ரசாயனங்கள் கலப்பதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Paddy Town ,Paddy ,Naddy Town ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...