×

பெரியதாழை கடற்கரையில் 80 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

சாத்தான்குளம் ஜூலை 26: பெரியதாழை கடற்கரையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ எடையுள்ள 2 மூட்டை பீடி இலைகளை கடற்கரை பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அப்பகுதியில் உள்ள கடலில் 2 மூட்டைகளில் மர்ம பொருள் மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், திருச்செந்தூர் ரேஞ்ச் கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடற்கரை பாதுகாப்பு படை போலீசார், அந்த மூட்டைகளை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் தலா 40 கிலோ எடையிலான பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. தற்போது இலங்கையில் பீடி இலை விலை உச்சத்தில் உள்ளதால், இங்கிருந்து கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் கடற்கரை பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியதாழை கடற்கரையில் 80 கிலோ பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Periyadal beach ,Satankulam ,Periyadala beach ,Dinakaran ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா