×

தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தர்மபுரி, ஜூலை 26: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, வரும் 3ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, வரும் 3ம்தேதி(வியாழக்கிழமை) தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அடுத்த மாதம் 26ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Adiperku festival ,Dinakaran ,
× RELATED வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு