பல்லடம், ஜூலை 26: பல்லடத்தில் சங்க கட்டிடம் கட்ட பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க கூட்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் தர்மராஜன் முன்னிலை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் சங்க செயலாளர் விமல் பழனிசாமி, பொருளாளர் பரமசிவம், தங்கலட்சுமி நடராஜன், பிரண்ட்ஸ் முத்துக்குமார், கதிரவன் ராமசாமி, டாக்டர் ராஜ்குமார், தேவராஜ், ராஜசண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்லடம் நகராட்சி, காவல் துறை ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் மக்கள் பங்களிப்பு தொகையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகரில் கண்காணிப்பு கேமரா அமைக்க நன்கொடை வழங்கிய 30 வியாபாரிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். சங்கத்திற்கு புதிய செயல் தலைவராக பானு பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். மேலும் சங்கத்திற்கு அலுவலகம் அமைக்க இடம் விலைக்கு வாங்கி அதில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
The post பல்லடத்தில் சங்க கட்டிடம் தாலுகா வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

