×

தேவதானப்பட்டி அருகே விவசாயியிடம் நகை பறிப்பு

தேவதானப்பட்டி, ஜூலை 26: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மன்னவனூரைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகம்(55). இவர் தற்போது தேவதானப்பட்டி அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கொடைக்கானல் சென்றுவிட்டு, தேவதானப்பட்டி வந்து கொண்டிருந்தார். தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோட்டில் இறங்கி தேவதானப்பட்டி செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தி தேவதானப்பட்டி செல்கிறோம் வருகிரீர்களா என கேட்டுள்ளார். சண்முகம் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

தேவதானப்பட்டி பால்பண்ணை அருகே வரும் போது ஆட்டோ டிரைவர் மற்றும் உடனிருந்த மற்றொருவர் கத்தியை காட்டி பணம் எடு என மிரட்டியுள்ளனர். பின்னர் சண்முகத்தின் பையை சோதனை செய்துள்ளனர். அதில் இருந்த 6பவுன் தங்க செயின் மற்றும் ரூ.500 பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து, அவரை கீழே இறக்கிவிட்டு தப்பிடிச்சென்றுவிட்டனர். இது குறித்து சண்முகம் தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேவதானப்பட்டி அருகே விவசாயியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Devadhanapatti ,Devadanapatti ,Sanmukam ,Mannavanur, Dintugul district, Kodaikanal ,Devadanapatti Annagar ,godawapatti ,
× RELATED சில்வார்பட்டியில் ஆணையாளர் ஆய்வு