×

கல்லூரியில் விளையாட்டு விழா

 

தேவதானப்பட்டி, ஜூலை 26: தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. குள்ளப்புரம் வேளா ண்மை தொழில்நுட்ப கல்லுரியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவானது 14வது மாணவர் மன்றத்தை சேர்ந்த கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களால் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரியின் தாளாளர் பலராமன் தலைமை வகித்தார்.

கல்லூரியின் முதல்வர் உமாபதி, கல்லூரி நிர்வாக அலுவலர் ரனதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, முன்னாள் மண் மற்றும் பயிர் மேலாண்மையியல் இயக்குனர் முருகப்பன், ஹைதரபாத் நபார்டு முன்னாள் மேலாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்கள் விளையாட்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post கல்லூரியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Kullapuram College ,of Agricultural Technology ,Kullapuram… ,College Sports Festival ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி