×

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் கன்னடபாளையம், எண்.112, அஸ்வினி நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ். இவர், தனது 1200 சதுர அடி காலி மனைக்கு மின் இணைப்புக்கேட்டு அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் 18.4.2011-ல் விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் இணைப்பு வழங்காததால் அம்பத்தூர் பிரிவு அயப்பாக்கத்தில் உள்ள இளநிலை பொறியாளர் எஸ்.தனசேகரனை 13.07.2011ல் அணுகி புதிய மின் இணைப்பு விண்ணப்பம் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது இளநிலைப்பொறியாளர் எஸ்.தனசேகரன் மறுநாள் வரும்படி கூறினார். பின்னர் 14-ந்தேதி சென்றுள்ளார். ஜனார்த்தன ராவ். அவரிடம் முதலில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். அப்போது ஜனார்த்தனரவ், தன்னால் நீங்கள் கேட்ட தொகையைசெலுத்த முடியாது என்றதால் ரூ.4 ஆயிரம் கேட்டுள்ளர். இதுகுறித்து ஜனார்த்தராவ் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எஸ்.தனசேகரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் ர15.7.2011 எஸ்.தனசேகரனிடம் ஜனார்த்தனராவ் கொடுத்தபோது அதிகாரிடளிடம்கையும் களவுமாக பிடிபட்டார். இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திருவள்ளூர் தலைமை நீதித்துறை நடுவர் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

The post நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Janardhana Rao ,Ashwini Nagar, No.112 ,Tirumullaivayal Kannadapalayam ,Avadi ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்