×

திருத்தணி நகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்: நகர்மன்ற தலைவர் வழங்கினார்

திருத்தணி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஜூலை மாதம் முதல் மாந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி மேயருக்கு, ரூ.30 ஆயிரம், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரம், நகராட்சி தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சி கவுன்சிலருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி தலைவருக்கு ரூ.10 ஆயிரம், துணை தலைவருக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலருக்கு ரூ.2,500 என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், திருத்தணி நகராட்சியில் நேற்று நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இம்மாதத்திற்கான மதிப்பூதியம் நேற்றே வழங்கப்பட்டது.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒருவர் ஆண் கவுன்சிலர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரை தவிர்த்து, 18 கவுன்சிலர்களுக்கு தலா ரூ..5 ஆயிரம், துணை தலைவருக்கு ரூ..10 ஆயிரம் நகர்மன்ற தலைவர் மதிப்பூதியம் வழங்கினார். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவிக்கு ஆணையர் அருள், ரூ..15 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கினார்.  இதுகுறித்து ஆணையர் அருள் கூறுகையில், அரசாணைப்படி மதிப்பூதியம், நேற்று நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் முன்கூட்டியே வழங்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

The post திருத்தணி நகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்: நகர்மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,President of the ,Tamil Nadu ,Editani ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து