×

அத்திமாஞ்சேரிபேட்டையில் புதிய காவல்நிலையம், சிசிடிவி கேமரா வசதி: ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு

பள்ளிப்பட்டு: அத்திமாஞ்சேரிபேட்டையில் புதிய காவல்நிலைய கட்டிடம் அமைவதற்கு ஏற்பாடு செய்து, சிசிடிவி கேமரா வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள கொடிவலசா ஊராட்சி மன்றத் தலைவராக வசந்தா பிரகாசம் பதவி வகித்துவருகிறார். பள்ளிப்பட்டு – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டையில் நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே அப்பகுதியில் 24 மணி நேரமும் நெசவுத்தொழில் நடைபெறுகிறது.

இங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி குற்றசம்பவங்களை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் தானாக முன்வந்து தனது நிதியிலிருந்து கண்காணிப்பு கேமராக்களை வாங்கினார். அந்தகேமராக்கள் பேருந்து நிலையம், பிரதானசாலை, முக்கிய வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே புற காவல் நிலையம் அமைக்கவேண்டும் என்று திருத்தணி டி.எஸ்.பி விக்னேசுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று புறகாவல் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து புற காவல் நிலையத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தனது சொந்தப் பணத்தை வழங்கியதையடுத்து கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வரும் 29ம் தேதி (சனிக்கழமை) இந்த புற காவல் நிலையம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அத்திமாஞ்சேரிபேட்டையில் புதிய காவல்நிலையம், சிசிடிவி கேமரா வசதி: ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Atthimancheripet ,Panchayat ,Pallipattu ,
× RELATED 2 நாள் டாஸ்மாக் விடுமுறை மதுக்கடைகளில் குவிந்த குடிமகன்கள்