×

ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: பயணிகள் கடும் அவதி

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐஆர்சிடிசி முடங்கியது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் திணறினர். இந்தியன் ரயில்வேயின் 17 மண்டலங்கள் மூலம் நாள்தோறும் பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் தொலைதூர பயணத்திற்காக எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், மெயில் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த ரயில்களில் சாதாரண படுக்கை வசதி, இருக்கை வசதி, ஏசி வசதி ஆகிய சேவைகள் உள்ளது.

இந்த ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தேவைப்படும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம், ரயில்வே செயலிகள் உள்ளன. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல் வேறு வசதிகளும் கிடைக்கின்றன. ஐஆர்சிடிசி இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலிகள் நேற்று காலை 10 மணியளவில் திடீரென முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிக்கையில், தொழில் நுட்ப காரணங்களால் ஐஆர்சிடிசியின் இணைய தளம் மற்றும் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில்வே துறையின் சி.ஆர்ஐஎஸ் தொழில்நுட்பக் குழுவினர் இப்பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில்வேயின் இணைய தளங்களுக்கு மாற்றாக அமேசான், மேக் மைட்ரிப் போன்ற தனியார் இணையதளம் வாயிலாக பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில மதியம் 2 மணியளவில் மீண்டும் இணையதளம் செயல்பட தொடங்கியது.

The post ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : IRCDC ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...