×

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொல்லப்பட்ட கோகுல்ஸ்ரீ தாயாருக்கு வீடு ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி

செங்கல்பட்டு: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ தாயாருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் பழனி‌. இவரது மனைவி ப்ரியா. இவர்களது மகன் கோகுல்ஸ்ரீ. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டன் மற்றும் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கோகுல்ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், இலவசமாக வீடு வழங்குவதாகவும் தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி நிவாரண தொகையாக ரூ.10லட்சம் அரசு சார்பில் பிரியாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், வீடு ஒதுக்கீடு செய்யவில்லை. இது சம்பந்தமாக ப்ரியா நேற்று முன்தினம் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனுவினை கொடுத்தார்‌. அதில் தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அரசு அறிவித்த வீட்டினை 7மாத காலமாகியும் வழங்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை கலெக்டர் ராகுல்நாத் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எனக்கு உடனடியாக வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்‌. இது குறித்து செய்தி தினகரன் நாளிதழில் நேற்று விரிவாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தாம்பரம் மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள அன்னை அஞ்சுகம் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டினை ஒதுக்கி அதற்கான சாவியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று பிரியாவிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட பிரியா கலெக்டர் ராகுல்நாத், தமிழக முதல்வர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

The post சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொல்லப்பட்ட கோகுல்ஸ்ரீ தாயாருக்கு வீடு ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Gokulshree ,Juvenile ,Reformatory ,CM ,Chengalpattu ,Govt ,Chengalpattu District ,Tambaram… ,Gokulsree ,Chief Minister ,
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...