×

ஒப்பந்ததாரர் வெட்டிக்கொலை

விருதுநகர்: விருதுநகர், மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் குமரவேல் (56). நகராட்சி மார்க்கெட் ஒப்பந்ததாரர். நேற்று பிற்பகல் தேசபந்து மைதானம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் அலுவலகத்தில் இருந்தபோது, 8 பேர் கொண்ட கும்பல் புகுந்து குமரவேலை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த உறவினர் ரூபி (41), ராம்குமார் (34) ஆகியோரையும் வெட்டினர்.இதில், குமரவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஒப்பந்ததாரர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kumaravel ,West Ratha Road, Virudhunagar ,Deshabandhu Maidan ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...