×

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 365வது நாளாக கிராமமக்கள் போராட்டம்: டிடிவி தினகரன் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 365வது நாளாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 365வது நாள் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக, ஏகனாபுரம் கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மக்களுக்கு விரோதமாக எந்த திட்டத்தை கடந்த ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த இந்த திட்டதால் தான் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, எடுத்துக்காட்டு ஸ்டெர்லைட் போராட்டம், மீத்தேன் திட்டம் கையில் எடுத்ததால் தான் வீழ்ச்சி ஏற்பட்டது. கொடநாட்டில் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை கண்டுபிடித்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரிந்துவிடும் என்பதற்காக பயத்தில்தான் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார்.

ஆக.20ல் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் வரி பணம் அதிக அளவில் கையாண்டு உள்ளனர். ஆகையால், மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 மற்றும் பிரியாணி வழங்குவார்கள். ஆகையால், மக்களின் மக்களுக்கே போய் சேரட்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என சசிகலா கூறியநிலையில், அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள். அவர்கள் அப்படிதான் கூறுவார்கள். ஆனால், அமமுக நாங்கள் சொல்லவில்லை. அதிமுக எடப்பாடி கம்பெனிகள் தான் அமமுகவில் சேரவேண்டும் என்றால் அவர்கள் தான் மன்னிப்பு கடிதம் கொடுத்து அமமுகவில் சேரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 365வது நாளாக கிராமமக்கள் போராட்டம்: டிடிவி தினகரன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : TTV Dhinakaran ,Kanchipuram ,Kanchipuram District, ,Kanchipuram district ,Paranthur ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...