
சென்னை: தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதி வைத்த சொத்தை ஆர்டிஓ ரத்து செய்தது சரிதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உடுமலைபேட்டையை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தனது சொத்தை மகள் சுகுணா பெயரில் தாய் எழுதி வைத்தார். இதற்கான பத்திரத்தை உடுமலை பேட்டை ஆர்.டி.ஓ பத்திர பதிவு செய்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு வயதான தன்னை தனது மகள் சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி மகள் மீது பதிவு செய்த சொத்து பத்திரத்தை ரத்து செய்யக்கோரி ஆர்டிஓவுக்கு தாய் மனு கொடுத்தார். இந்த மனுவை பெற்ற ஆர்.டிஓ தாயை பராமரிக்காத மகளின் சொத்து பதிவை ரத்து செய்தார். இதை எதிர்த்து மகள் உயர் நீதிமன்றத்தில் தாய் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தாயை பராமரிக்காத மகளின் சொத்து பத்திரப்பதிவை ஆர்.டி.ஓ ரத்து செய்தது சரியானது தான். மூத்த குடிமகன்களை பராமரிக்காவிட்டால் இதை செய்ய சட்டத்தில் ஆர்.டி.ஓவுக்கு அதிகாரம் உள்ளது. மகள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
The post தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதி வைத்த சொத்தை ஆர்.டி.ஓ ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.