
- பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து
- பிலிப்பைன்ஸ்
- வெலிங்டன்
- நியூசிலாந்து
- பெண்கள் உலக கோப்பை கால்பந்து
- தின மலர்
வெலிங்டன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரில் பிலிப்பைன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவு செய்தது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ் அணி நேற்று போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. 24வது நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் நடுகள வீராங்கனை சாரா எக்கெஸ்விக் கார்னர் பகுதியில் இருந்து தட்டிதந்த பந்தை முன்கள வீராங்கனை சரினா போல்டன் தலையால் முட்டி கோலாக்கினார். முதல் பாதியில் பிலிப்பைன்ஸ் பெற்ற முன்னிலை கடைசி வரை தொடர்ந்தது. நியூசி. வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்தும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் பிலிப்பைன்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் சாதனை வெற்றியை பதிவு செய்தது. மகளிர் உலக கோப்பையில் முதல்முறையாக களமிறங்கியுள்ள பிலிப்பைன்ஸ் முதல் கோல் மற்றும் முதல் வெற்றியை வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து – நார்வே அணிகளிடையே நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: பிலிப்பைன்ஸ் சாதனை வெற்றி appeared first on Dinakaran.