×

திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த தொழிலாளர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பொன்னி மாந்துரை புதுப்பட்டி அருகே 10க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் தனியார் தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தோல் பதனிடும் தொட்டியை சுத்தம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அமோனியம் சல்பேட் என்ற வாயு தாக்கியதில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஹாசன், சுமன் மற்றும் விருதுநகரை சேர்ந்த வெங்கட்ராம் ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மயக்கமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி 3 நபர்கள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Dindukal ,Government Hospital of Didiukkal ,Thindukal ,Thindugul ,Dinakaran ,
× RELATED கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,...