×

கியா செல்டாஸ் பேஸ்லிப்ட்

கியா நிறுவனம், புதிய செல்டாஸ் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் கொண்டது. இதுபோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளி்பபடுத்தும். இது 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டது. இதுதவிர, புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் கொண்டது. பெட்ரோல் இன்ஜனில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே பிளஸ் மற்றும் எச்டிஎக்ஸ் வேரியண்ட்கள் உள்ளன. சிவிடி கியர் பாக்ஸ் எச்டிஎக்ஸ் வேரியண்டில் மட்டும் இடம் பெற்றுள்ளது. புதிய வடிவமைப்புடன் ஹெட்லைட், எல்இடி லைட்டுகள், எல் வடிவ டெயில் லைட்டுகள், ஸ்போர்டியான பம்பர் ஆகியவை இடம் பெற்றுள்ன.

10.25 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அடாஸ், பனோரமிக் சன்ரூப், ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 8 அங்குல ஹெட் அப் டிஸ்பிளே, மழை வரும்போது தானாக செயல்படும் வைப்பர்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த காரில் மொத்தம் உள்ள 7 வேரியண்ட்களில் துவக்க வேரியண்டான எச்டிசி 1.5 லட்டர் பெட்ரோல் எம்டி ஷோரூம் விலை சுமார் ரூ.10.9 லட்சம் எனவும், டாப் வேரியண்டான 1.5 லிட்டர் டீசல் ஏடி எக்ஸ் லைன் சுமார் ரூ.20 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டள்ளது.

The post கியா செல்டாஸ் பேஸ்லிப்ட் appeared first on Dinakaran.

Tags : Kia ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்