×

விஜயின் `நா ரெடி’ பாடலுக்கு ஷிகார்தவான் அசத்தல் நடனம்

மும்பை: ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் தளபதியாக முன் நின்று அனைத்து அணிகளுக்கும் எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் ஷிகர் தவான். இவரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் குறைந்தது. அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இருப்பினும் மனம் தளராத ஷிகர் தவான், காயத்திலிருந்து குணமடைந்ததோடு பேட்டிங் பயிற்சியையும் தொடங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றார். களத்திலும், வெளியிலும் உற்சாகமாக இருக்கும் ஷிகர் தவான் சினிமா பாடல்களுக்கு அவ்வப்போது ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள நா ரெடி பாடலுக்கு ஷிகர் தவான் டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ”நா ரெடி” பாடலில் தோன்றும் விஜய் எப்படி சட்டை பட்டனை கழற்றிவிட்டு மாஸாக இருப்பாரோ, அதேபோல் ஷிகர் தவானும் சட்டை பட்டனை கழற்றிவிட்டு ரீல்ஸ் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாயில் சிகரெட்டிற்கு பதில் குச்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் சிகரெட் வைத்து ரீல்ஸ் செய்து வந்த நிலையில், ஷிகர் தவான் குச்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விஜயின் `நா ரெடி’ பாடலுக்கு ஷிகார்தவான் அசத்தல் நடனம் appeared first on Dinakaran.

Tags : Shikhardhawan ,Vijay ,Mumbai ,ICC ,Shikardhawan ,Dinakaran ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch