×

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக திட்டம் உள்ள மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஐயங்கார்குளம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.எம்.ஆர்.க.குமணன் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் ‘’பெண்ணுரிமையில் கலைஞரின் பங்கு’’ என்ற தலைப்பில் சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது; ண்களுக்கான நலத் திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் ஆட்சியில் பெண்ணுரிமை மற்றும் சொத்துரிமை என்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண் கல்வி மற்றும் சுகாதாரம் என்று பெண்கள் நலனில் தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு ஆளும் மாநிலங்களில் கல்வி உரிமை என்பதே கிடையாது. வாழ்வாதாரத்தில் முக்கியபங்கு வகிக்கும் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் டோல் கட்டணம், ஜிஎஸ்டி என அனைத்திலும் உயர்வு அளித்து தற்போது தமிழகத்தை பார்த்து குறை சொல்கிறார்கள். இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட குழு துணை தலைவர் நித்யாகுமார், ஒன்றிய குழு தலைவர்கள் மலர்கொடி குமார், ஹேமலதா ஞானசேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் திவ்ய பிரியா இளமது, வசந்திகுமார், ஒன்றிய நிர்வாகிகள் கன்னியப்பன், தயாளன், வீரராகவன், முனியம்மாள் ராஜகோபால், கமலக்கண்ணன், பரசுராமன், தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு, வில்லவன், அசோகன், ஐயங்கார்குளம் நிர்வாகிகள் சண்.தேவராசன், அன்பழகன், சந்திரசேகர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி கழக நிர்வாகிகள், ஊராட்சி இளைஞர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

The post இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக திட்டம் உள்ள மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,Keetajivan ,Kanchipuram ,Kanchipuram South District ,Kanchipuram South Union Dishagaga ,Meeting ,Iyankarkulam ,Ketajivan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...