×

மூன்று விஷயங்கள் சிறப்பாக இருந்தால் வெற்றி நிச்சயம்: கேப்டன் ரோகித்சர்மா சொல்கிறார்

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணி க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 438 ரன் குவித்தது. விராட்கோஹ்லி 121 ரன் எடுத்தார். இதுபோல் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2வது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 24 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் 57, இஷான்கிசன் 52 ரன் எடுத்தனர். இதையடுத்து 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன் எடுத்தது. இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5வது நாளில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியின் அஸ்வின் – ஜடேஜா இணை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தி அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 289 ரன்களே தேவை என்பதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பார்க்கப்பட்டது. இதனால் 5வது நாள் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் கடைசி நாளில் ஒரு பந்துகூட வீச முடியவில்லை. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. 2வது டெஸ்ட போட்டி டிராவில் முடிந்த நிலையில், தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமதுசிராஜ் ஆட்டநாயகன் விருதுபெற்றார். ந்த போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 புள்ளிகள் கிடைத்திருக்கும். ஆனால் மழையின் குறுக்கீட்டால் போட்டி டிரா ஆனதால் வெறும் 4 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ட்டிக்கு பின் இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில் “வெஸ்ட் இண்டீசில் விளையாடுவது எளிதல்ல. நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே எல்லாம் சிறப்பாக சென்றது. ஆனால், கடைசி நாளில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் டிரா ஆனது. எதிரணிகளுக்கு எதிராக இதேபோல்தான், அபாரமாக பேட்டிங் செய்ய விரும்புகிறோம்.

முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீச்சு துறையை வழிநடத்தினார். சிராஜ் மட்டுமல்ல, அனைத்து பவுலர்களும் தலைமை பொறுப்பை ஏற்று பந்துவீச வேண்டும். அப்போதுதான் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இஷான் கிஷன் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காகதான், கோஹ்லிக்கு முன்பே அவரை களமிறக்கினோம். இஷானும் பயமில்லாமல் விளையாடி அசத்தினார். கோஹ்லி நிலை தன்மையோடு விளையாடியது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. ஒரு போட்டியில், மூன்று விஷயங்களில் சரியாக செயல்பட்டால்தான் வெல்ல முடியும். மிகச்சிறந்த பீல்டர்கள், அழுத்தங்கள் நிறைந்த நேரத்தில் சிறப்பாக பந்துவீசிக் கூடிய பவுலர்கள்… காலநிலைக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்பட பேட்டிங் செய்யக் கூடிய பேட்டர்கள். இந்த மூன்று தகுதியைத்தான் வீரர்களிடம் எதிர்பார்க்கிறேன். அப்படிப்பட்ட வீரர்களுக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு’’ என்றார்.

The post மூன்று விஷயங்கள் சிறப்பாக இருந்தால் வெற்றி நிச்சயம்: கேப்டன் ரோகித்சர்மா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rokitsarma ,Port of Spain ,West Indies ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்...