×

பெண்ணை கர்ப்பமாக்கினால் பணம் தருவதாக மோசடி: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: பெண்ணை கர்ப்பமாக்கினால் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி கெஸ்ட் ஹவுஸ் ஊழியரிடம் நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். துச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் வசிப்பவர் ஸ்ரீஜித் (44). இவர் அங்குள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பில் சொந்தமாக கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வருகிறார். இங்கு நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவரை கடந்த மாதம் செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆஃபர் இருப்பதாக கூறிய அவர் தாங்கள் ஒத்துழைத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்தியசாலை நடத்தி வருவதாகவும், அங்குவரும் பெண்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே மர்ம நபர் கேட்டதற்கிணங்க தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை ஷாஜன் பட்டராய் அனுப்பி வைத்தார். தன் பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்வதற்காக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.49 ஆயிரம் ஆகியவற்றை ஷாஜன் பட்டாராய் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆவணங்களை அதில் அனுப்பி இருந்தார்.

இந்த பணத்தை நீங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் மற்றும் பதிவு கட்டணம் மட்டும் கட்டினால் போதும் என அந்த நபர் கூறியுள்ளார். தனது வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என ஷாஜன் பட்டாராய் ஆய்வு செய்து பார்க்காமல் அந்த மர்ம நபர் அனுப்பிய கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் பணத்தை செலுத்திவிட்டார். ஆனால் இதன் பின்னர் ஷாஜன் பட்டாராயால் அந்த நபரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மர்ம நபர் தனது செல்போன் இணைப்பை முற்றிலும் துண்டித்து விட்டார். இதன் பின்னர் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த பார்த்போது மர்ம நபர் கூறியதுபோல் எந்த தொகையும் தனது கணக்கில் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாகே போலீசார் மோசடி பிரிவின்கீழ் வழக்குபதிந்து ஷாஜனை ஏமாற்றிய பலே ஆசாமியை தேடி வருகின்றனர். பெண்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post பெண்ணை கர்ப்பமாக்கினால் பணம் தருவதாக மோசடி: புதுச்சேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு