×

பஸ் கூரை மீது ஏரி ரகளை செய்த 4 கல்லூரி மாணவர்களுக்கு நூதன முறையில் தண்டனை: வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அதிரடி

 

தண்டையார்பேட்டை: எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை மாநகர பேருந்து (தடம் எண் 56-ஏ) இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வள்ளலார்நகர் பகுதிக்கு பேருந்து புறப்பட்டது. அப்போது, வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் பேருந்து கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சத்துடன் இருந்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் டிரைவர் புகார் அளித்தார்.

இதனிடையே, இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்து கூரை மீது அமர்ந்து பயணம் செய்த பிரவீன் (19), பிரவீன் குமார் (19), ஜோசப் (19), கோகுலகிருஷ்ணன் (19) என்பதும், தியாகராயா கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதால், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார்ரெட்டி அறிவுறுத்தல்படி 4 மாணவர்களும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து காலை, மாலை என இருவேளையும் 7 நாட்கள் போக்குவரத்தை சீர்செய்யவேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து மூலக்கொத்தளம் தங்கசாலை ஆகிய பகுதிகளில் 4 மாணவர்களும் போக்குவரத்து காவலருடன் இணைந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post பஸ் கூரை மீது ஏரி ரகளை செய்த 4 கல்லூரி மாணவர்களுக்கு நூதன முறையில் தண்டனை: வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Deputy Commissioner ,Vannarappat ,Thandaiyarpet ,Ennore ,Vallalar Nagar ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...