×

கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்: கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் வாய்க்கால் கரையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி சாகர் அணையிலிருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கீழ் பவானி கால்வாய் மூலமாக நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த கால்வாயை சீரமைக்க 2020ம் ஆண்டு ரூ.710 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் கான்கிரீட் பணிகளை மேற்கொள்ள கீழ்பவானி பாதுகாப்பு இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கான்கிரீட் பணிகளை எதிர்த்து ஈரோடு மாவட்டம் பெருந்துரை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கரையில் நின்று 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நடந்து வரும் சீரமைப்பு பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வரும் 15ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து பாசனத்திற்காக நீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் 11ம் தேதி ஈரோட்டில் உள்ள நீர்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அன்னக்கொடி என்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

The post கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்: கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Drain ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...