×

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

*திமுக., மகளிரணியினர் பங்கேற்பு

ஊட்டி : மணிப்பூரில் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஊட்டியில் நீலகிரி மாவட்ட திமுக., மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாஜக., ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொடர் கலவரம் நடைபெற்ற வருகிறது. இதில் பழங்குடியின பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து, திமுக., மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் நேற்று நீலகிரி மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஊட்டியில் உள்ள ஏடிசி., சுதந்திர திடல் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில திமுக., மகளிரணி இணை செயலாளர் குமாரி ஜெயகுமார் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் முன்னிலை வகித்தார். மாவட்ட மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகுமாரி வரவேற்றார்.

முன்னதாக மகளிர் அணியினை சேர்ந்தவர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பலரும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தின் போது, மணிப்பூர் பிரச்னையில் கண்டுக்கொள்ளாமல் உள்ள மத்திய அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற கொடூரமான சம்பவங்களை வேடிக்கை பார்த்த மணிப்பூர் அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி பெண்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா,காசிலிங்கம், செந்தில், திராவிடமணி, ராஜூ, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான்,மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா,ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன்,சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி,சேகரன், இளஞ்செழியன் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை,செல்வம்,மோகன்குமார்,வீரபத்திரன்,நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சுனிதா,கீர்த்தனா,பேரூராட்சி தலைவர்கள் ஜெயகுமாரி, கௌரி, சித்ராதேவி,வள்ளி,சத்தியவாணி,ராதா,பங்கஜம்,முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வெண்ணிலா,மைமூனா, காவேரி,செல்லம், லலிதா, கீதா, யசோதா,ஜெயந்தி, அன்னபுவனேஸ்வரி, சரோஜா, விசாலாட்சிஉட்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கண்ணம்மா நன்றி கூறினார்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooti ,Manipur ,Dizhagam ,Nilgiri ,Ooty ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது