×

குமரி மேற்கு மாவட்டத்தில் ₹6.60 கோடி மதிப்பில் சாலை பணி

*அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

குலசேகரம் : குமரி மாவட்டம் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சாலை வளர்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இதனால் நெடுஞ்சாலை முதல் கிராம சாலைகள் வரை மிக மோசமான நிலையில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் முயற்சியால் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான சாலைகள் புத்துயிர் பெற்று வருகிறது.

தற்போது ஏராளமான கிராம சாலைகள், இணைப்பு சாலைகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ₹6.60 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட ஆனன்விளை கருணாகுளம் சாலை, வில்லாரி விளை- பொத்தியான் விளை சாலை, பொத்தியான் விளை சாலை- புல்லு விளை சாலை ஆகியவை ₹48 லட்சம் செலவில் கருந்தளம் அமைக்கப்படுகிறது.

இதே போன்று சேம்பழஞ்சிவிளை அரையாகுழி விளை சாலை சரல் விளை குறுந்தொட்டி விளை சாலை பூச்சியான் விளை அறிவை சாலை ₹ 75 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. சீனி விளை குறுந்தொட்டி விளை வேப்பு விளை காளியார் தோட்டம் சாலை பண்டாரவிளாகம் வண்ணத்தான் விளை சாலை வில்லாரி விளை பாறையடி சாலை புள்ளியான் விளை சாலை ₹ 89.50 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. காட்டாத்துறை ஊராட்சியில் சுவாமியார் மடம் சர்ச் – நெடியான்கோடு சாலை ₹32.5 லட்சம், கருவச்சான்குழி சாலை ₹ 90 லட்சம், நெடியான்கோடு – கஞ்சிமடம், தெற்றை சாலை ₹40 லட்சம், தெற்றை முதல் இலந்தயம்பலம் சந்திரன்விளை சாலை ₹31 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.

குமரன்குடி ஊராட்சியில் வடக்கநாடு – ஆனையடி சாலை ₹27 லட்சம், ஆனையடி – கொட்டறவிளை, நெடுங்கோடு சாலை ₹ 35 லட்சம், ஆனையடி பெருங்குளம் – வடக்கநாடு சாலை ₹49 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. செறுகோல் ஊராட்சியில் செவரக்கோடு – காளிக்குளம் சாலை – 30 லட்சம், குட்டகுழி பொறியியல் கல்லூரி – கோணம் சாலை ₹41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலூர் – மூசாரி இணைப்பு சாலை ₹ 72 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார். செறுகோல் ஊராட்சியில் ₹10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாலத்தை திறந்து வைத்தார்.

திருவட்டார் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சாலை பணி தொடக்க நிகழ்ச்சிகளில் திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராம்சிங், ஊராட்சி உறுப்பினர் லிபின், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் லெனின், ஒன்றிய துணை செயலாளர் சுமிதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வின்சர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருள்செல்வன், கிளை செயலாளர்கள் டேனியல், சசிகுமார், விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post குமரி மேற்கு மாவட்டத்தில் ₹6.60 கோடி மதிப்பில் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Kumari West district ,Minister ,Manodhankaraj ,Kulasekaram ,Kumari district ,AIADMK ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...