×

வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பற்கள் கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் விலங்கின் பற்கள் கண்டெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண் விளையாட்டு வட்ட சில்லுகள், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள், குழந்தைகள் விளையாட்டு குவளை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, விலங்குகளின் எலும்புகள், கொம்பு, தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.

மேலும் தற்போது விலங்கின் பல் வரிசை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பற்கள் எந்த விலங்கினுடையது என்பது முழுமையாக ஆராய்ந்த பின்பே தெரியவரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அகழாய்வில் தற்போது வரை 2,900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பற்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Vijayakarisalkulam ,Vembakottai ,Vembakottai, Vridhunagar district ,
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா