×

மலைவாழ் மக்களின் கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு தடை: மசினகுடி ஊராட்சி பொதுமக்கள் உதகை ஆட்சியரிடம் புகார்

உதகை: உதகை அருகே மசினகுடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய தடை விதிக்கும் வனத்துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதியதாக குடிநீர் தொட்டி கட்ட நடப்பதை அமைக்க ரூ.20 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.

அதேபோல மாவநள்ளா பகுதியில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கிராமத்தை சுற்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல செம்மநத்தம் கிராமத்திலும் அடிப்படை வசதிகளை செய்ய வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து 3 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உதகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரிதை நேரில் சந்தித்து வனத்துறையினரின் அத்து மீறல் பற்றி தெரிவித்தனர். அவர்களிடம் புகாரை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பணிகளை தொடர உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post மலைவாழ் மக்களின் கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு தடை: மசினகுடி ஊராட்சி பொதுமக்கள் உதகை ஆட்சியரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Massinakudi panchayat ,Utagai Collector ,Utkai ,Masinakudi panchayat ,Masinakudi ,panchayat ,Utkai collector ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...