×

காட்டுமன்னார்கோவிலில் ஒரே எருமை மாட்டை 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் குழப்பம்: விழிபிதுங்கி நின்ற போலீசார், பல டெஸ்டுகளை வைத்து பலே தீர்ப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் ஒரே எருமை மாட்டை 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் விழிபிதுங்கி நின்ற போலீசார் பல டெஸ்டுகளை வைத்து பலே தீர்ப்பை வழங்கினர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பழனிவேல் ஆடுமாடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் சிதம்பரம் வீரன் சோழன் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் தீபா தம்பதி பழனிவேல் மீது போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருடு போன 6 எருமைமாடுகளில் 5 பழஞ்சநல்லூரில் இருந்து மீட்டதாகவும் எஞ்சிய ஒரு மாட்டை பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மாட்டுடன் பழனிவேலை அழைத்து வந்து விசாரித்த போது தனது உறவினரிடமிருந்து வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக கூறினார்.

இந்த விசித்திரமான வழக்கால் விழிபிதுங்கிய போலீசார் மாடு யாரிடம் அதிகம் பாசம் காட்டுகிறது என டெஸ்ட் வைத்தனர். சர்ச்சை கூறிய எருமை மாடானது குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் புகார் தாரர் என இருவரிடமும் பாரபட்சம் இல்லாமல் பாசம் காட்டியதால் போலீசாருக்கு குழப்பம் அதிகரித்தது.

அடுத்த டெஸ்ட் குறித்து போலீசார் யோசித்து கொண்டிருந்த போதே மாட்டை அவிழ்த்த பழனிவேல் விரலை சுண்டி சைகை செய்தவுடன் மாடு அவர் பின்னாலேயே சென்றது. பழனிவேலிடமே எருமை அதிக பாசம் காட்டியதாக தீர்ப்பு வழங்கிய போலீசார் மாட்டை அவரே ஒட்டி செல்லலாம் என தெரிவித்தனர் கூடுதல் ஆதாரங்களுடன் விரைவில் திரும்பி வருவதாக கூறிய புகார் தாரர் தீபா அங்கிருந்து கிளம்பியதால் 3 மணி நேர பேச போராட்ட டெஸ்ட் முடிவுக்கு வந்தது.

The post காட்டுமன்னார்கோவிலில் ஒரே எருமை மாட்டை 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் குழப்பம்: விழிபிதுங்கி நின்ற போலீசார், பல டெஸ்டுகளை வைத்து பலே தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kattumannarkovil ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர்...