×

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது!!

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்து சென்றனர்.

மேலும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான 9 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘நாங்கள் எல்லை  தாண்டி மீன் பிடிப்பதே கிடையாது. ஆனால் இலங்கை கடற்படையினர் நமது கடல் பகுதியிலேயே வந்து கைது செய்கின்றனர். இதனால் மீன்பிடி தொழிலையே கைவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையை நிறுத்த  ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் இவர்களில் கைது மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது!! appeared first on Dinakaran.

Tags : Naval Series ,Nadu ,Ramanathapuram ,Sri Lankan Navy ,Nedundivu ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...