×

கோவையில் பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கோவை : கோவையில் பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி, கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியில் தற்போதைய நிலவரப்படி (காலை 4.30) நீர்மட்டம் 94 அடியை எட்டி உள்ளது.

இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்திடவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோவையில் பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : River ,Govai ,Grandi Kumar ,Bhavani riverbank ,Nilgiri ,Bhavani River ,Dinakaran ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை