×

புதிய பால் சொசைட்டி துவங்க அனுமதிக்க கூடாது

 

தர்மபுரி, ஜூலை 25: தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம், ஏரியூர் அருகே உள்ள பெரிய ெவத்தலாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் சாமிகண்ணு மற்றும் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏரியூர் தாலுகா பெரிய ெவத்தலாபுரம் கிராமத்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இவர்களிடமிருந்து தினமும் 350 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, வெளிப்படையான நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. சங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால், சிலர் ஆவின் அதிகாரிகள் துணையுடன் சங்கத்தை சீர்குலைக்கும் விதமாக, பெரிய வெத்தலாபுரத்திற்குட்பட்ட கிராமத்தில், மேலும் ஒரு கூட்டுறவு பால் சொசைட்டி துவங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நல்ல நிலையில் செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயலும் ஆவின் அதிகாரிகள் மற்றும் தூண்டும் நபர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய வத்தலாபுரத்தில் மேலும் ஒரு பால் சொசைட்டி துவங்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் ஆவின் சார்பில், 244 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இது தவிர 33 குளிரூட்டு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் பெரிய வத்தலாபுரத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் துவங்கும்போதே, அருகில் உள்ள சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் வெளிப்படை தன்மையுடன், கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்வதால் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில், ஆவின் அதிகாரிகள் சுயலாபத்திற்காக எங்கள் ஊரிலேயே மேலும் ஒரு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் துவங்க அனுமதி அளித்துள்ளனர். இது எங்களது சங்கத்தை முடக்குவது போல் ஆகும். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி பெரியவத்தலாபுரத்தில், புதிய பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் துவங்க அனுமதிக்க கூடாது. சுயலாபத்திற்காக செயல்படும் ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post புதிய பால் சொசைட்டி துவங்க அனுமதிக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : New Milk Society ,Darmapuri ,Collector ,Shanthi ,Bhattalapuram Milk Producer Cooperative ,Ariyur ,New Dairy Society ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...