×

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.15.18 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

திண்டுக்கல், ஜூலை 25: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.15.18 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. திண்டுக்கல்லில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பொது உண்டியல்கள் 22 திருப்பணி உண்டியல் ஒன்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், மேற்கு ஆய்வாளர் சுரேஷ், பரம்பரை நிர்வாக அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் மேற்பார்வையில் பரம்பரை அறங்காவலர் குழுவினர், கோவில் ஊழியர்கள், ஆன்மீக சேவா சபையை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 790 ரூபாய் ரொக்கம் ரொக்கமாகவும் தங்கம் 154 கிராம் வெள்ளி 661 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

The post திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.15.18 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் appeared first on Dinakaran.

Tags : Mariamman temple ,Dindigul Fort ,Dindigul ,Dindigul Fort Mariyamman temple ,Dindigul… ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி