×

திருச்சியில் வேளாண் கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 25: தமிழக அளவில் திருச்சியில் மூன்று நாட்கள் நடக்கும் வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி கூறியதாவது: 2023-24ம் ஆண்டுக்கான சட்டசபை மானிய கோரிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் விவசாய கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 27,28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி கேர்பொறியியல் கல்லூரி வளாகத்தில் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் வேளாண்மையை எளிமைப்படுத்தும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருமானத்தை பெருக்கவும், வேளாண் விளை பொருட்கள்,மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய மரபுசார் மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள், பசுமை குடில் பாரம்பரிய உணவு ரங்கங்கள், பிற பயிர் ரகங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு என பல்வேறு வகையான திட்டங்கள் குறித்து இடம் பெற உள்ளது. ஆகவே இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும். கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பினால் agriexpo2023.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என்றார்.

The post திருச்சியில் வேளாண் கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Agriculture fair ,Trichy ,RS ,Mangalam ,Agricultural Sangamam Agricultural Fair ,Trichy, Tamil Nadu ,Agricultural Fair ,
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...