×

விபத்தில் வாலிபர் பலி

 

தொண்டி, ஜூலை 25: தொண்டி அருகே டூவீலரில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து பலியானார். நாகபட்டினம் மாவட்டம் சிறு முல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன்(27). தொண்டி அருகே உள்ள சோழியக்குடியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.இவர் நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளை அருகே டூவீலரில் வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காட்டு கருவை மரங்களிடையே விருந்து பலியானார். இது குறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Tondi ,Thondi ,Nagapattinam District ,Dinakaran ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை