×

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

காரைக்குடி, ஜூலை 25: கரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முபா அகாடமி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். பயிற்சியாளர்கள் அஸ்வத் பாபு, அன்பரசன், ஜெயகுமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். தலைமைப்பண்பு, நேர்முகத் தேர்வுக்கான நுணுக்கங்கள் உள்பட பல்வேறு பயிற்சியளிக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மின்னியல் துறைத் தலைவர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

The post திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kummangudi Vivekananda Polytechnic College ,Kummangudi Vivekananda Polytechnic College MUBA Academy ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி