×

பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் போராட்டம்

 

திருவாரூர், ஜூலை 25: மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜ தலைமையிலான மாநில அரசு, ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர், திருத்துறைப்பூண்டியில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வரும் பாஜ தலைமையிலான மாநில அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் மோடியை கண்டித்து திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் நேற்று முன்தினம் மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, வீரபாண்டியன், சலாவுதீன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முகமது உதுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக பிரதமர் மோடியை கண்டித்து அவரது உருவ பொம்மையை கட்சியினர் எரித்தனர். இதையடுத்து போலீசார் அதை தடுக்க முயன்றும் முழுவதுமாக தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், நகர செயலாளர் கோபு, கோட்டூர் ஒன்றிய செயலாளர் சண்முகம், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர், திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ர் போராட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, முருகானந்தம், தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிநாதன், பிரகாஷ், நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம், கட்சியின் கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், மணிப்பூர் மாநில அரசே உடனடியாக பதவி விலகு என முழக்கமிட்டு, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி அணைக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட 55க்கும் மேற்ப்பட்டோர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Thiruvarur ,BJP ,Manipur ,Union… ,Modi ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...