×

காதுகேளாத, வாய் பேசாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

 

தஞ்சாவூர். ஜூலை 25: காதுகேளாத, வாய் பேசாதவர்களுக்கு இலவச வீட்டுமனை உடனே வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

காதுகேளாதோர் வாய் பேசாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அலுவலகம் மற்றும் பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். மாநில முழுவதும் காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களை அரசாணை எண் 151-ன் படி உடனடியாக நிரந்தர பணி அமர்த்த வேண்டும். அரசு பணிகளில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு 1 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும். தனியார் துறை நிறுவனங்களில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாத குடும்பங்களை சார்ந்தவர்களின் அனைத்து குடும்ப அட்டைகளையும் ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைகளாக மாற்றி தரப்பட வேண்டும்.

மாநில முழுவதும் காதுகேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டுமனை உடனே வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காதுகேளாத, வாய் பேசாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு appeared first on Dinakaran.

Tags : PWD ,Thanjavur District Collector ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...