×

வாலிபரை ஓட ஓட விரட்டி சரமாரி கட்டையால் தாக்கிய திருநங்கைகள் வீடியோ வைரல்; போலீஸ் விசாரணை செங்கம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு

செங்கம், ஜூலை 25: செங்கம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி திருநங்கைகள் சரமாரி கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநங்கைகளிடம் வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ் என்ற வாலிபர் சட்டை இல்லாமல் வந்து திருநங்கைகளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், யாசகம் பெற்று வைத்திருந்த பணத்தையும் பறிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ஒன்று கூடி போதை வாலிபரை ஓட ஓட விரட்டி கட்டையால் சரமாரி தாக்கினர். அப்போது பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் தங்கள் மீது அடி விழாமல் இருக்க அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு செங்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கஞ்சா போதை வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் ஆடையை கலைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாலிபரை செங்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருநங்கைகள் வாலிபரை ஓட ஓட கட்டையால் தாக்கியதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

The post வாலிபரை ஓட ஓட விரட்டி சரமாரி கட்டையால் தாக்கிய திருநங்கைகள் வீடியோ வைரல்; போலீஸ் விசாரணை செங்கம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sengam ,Sengam new bus station ,
× RELATED அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த...