×

முதலியார்பட்டி ரஹ்மத்நகரில் அடிப்படை வசதி

தென்காசி, ஜூலை 25: கடையம் ஒன்றியம் முதலியார்பட்டி ரஹ்மத் நகரில் அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் எஸ்டிபிஐ கட்சியினருடன் இணைந்து அப்பகுதி பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கடையம் ஒன்றியம் முதலியார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 வருடங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் ஓடை, சாலை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் சாலைகளில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் மர்ம காய்ச்சலினால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் அடிப்படை வசதிகள் விரைந்து செயல்படுத்த கோரி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத் தலைமையில் ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் திரண்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி நகர தலைவர் அப்துல் அஜீஸ், நகர செயற்குழு உறுப்பினர் காசிம், நகர பொருளாளர் உமர், தென்காசி நகர துணைச்செயலாளர் ஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதலியார்பட்டி ரஹ்மத்நகரில் அடிப்படை வசதி appeared first on Dinakaran.

Tags : Rahmadnagar ,South Kashi ,SDBI ,Rahmed Nagar ,South ,Kadam ,Union ,Dinakaran ,
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...