×

10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

வீரவநல்லூர், ஜூலை 25: மேலச்செவல் பேரூராட்சிக்குட்பட்ட பெரியசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். வெல்டிங் தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் பாலாஜி என்ற பரத்(14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் பாலாஜி சேரன்மகாதேவி உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், பாலாஜி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Veeravanallur ,Periyasamy Colony ,Melacheval Municipality ,Vijayalakshmi ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி