×

தமிழக அரசு அறிவித்து 7 மாதங்களாகியும் வீடுகட்டி தரவில்லை: மாணவன் கோகுல்ஸ்ரீ தாய் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ப்ரியா. இவரது மகன் கோகுல்ஸ்ரீ கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டன் மற்றும் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். மறுநாளே கோகுல்ஸ்ரீ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 9 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், இலவசமாக வீடு கட்டித்தருவதாகவும் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ஸ்ரீயின் தாய் ப்ரியா கூறுகையில், ‘‘தமிழக அரசின் சார்பில் கோகுல்ஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதி உதவியும் இலவசமாக வீடுகட்டி தருவதாகவும் பிப்ரவரி 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அறிவிப்பின் அடிப்படையில் நிதியுதவி ரூ.10 லட்சத்திற்கான காசோலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 7 மாத காலமாகியும் இலவச வீடு கட்டித்தரவில்லை இதுவரை நான்கு முறை மனு அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வரை அதே குப்பைமேட்டில் அனாதையாக பாதுகாப்பு இல்லாமல் வசித்து வருகிறேன். தற்போது மீண்டும் ஐந்தாவது முறையாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இந்த மனுவை கலெக்டர் ராகுல்நாத் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எனக்கு உடனடியாக வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என கூறினார்.

The post தமிழக அரசு அறிவித்து 7 மாதங்களாகியும் வீடுகட்டி தரவில்லை: மாணவன் கோகுல்ஸ்ரீ தாய் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Gokulshree ,Chengalpattu ,Tambaram ,Chengalpattu district ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...