×

மணிமங்கலம் தேவி கருமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் 23ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 27ம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் 23ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி கணபதி புஜையுடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத்தினர்.

இதில் மணிமங்கலம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு, படப்பை, கரசங்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆடித்திருவிழா மற்றும் தீமிதி திருவிழாவில் முன்னதாக அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில், உற்சவர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தின் சார்பாக வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

The post மணிமங்கலம் தேவி கருமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Manimangalam Devi Karumariyamman Temple Thimiti Festival ,Sriperumbudur ,23rd annual ,Dimithi festival ,Manimangalam Sri Devi Karumariyamman Temple ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்