×

பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்திற்க்கு பாஜதான் காரணம் என பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதால் மணிப்பூர் மாநில முதல்வரை கைது செய்திட வலியுறுத்தியும், நீதிமன்றங்களுக்கு கவனம் செலுத்திட எவ்வளவோ பிரச்னைகள் இருந்தும் அதனை கண்டு கொள்ளாமல், அம்பேத்கர் உருவ சிலைகளையும், படங்களையும் அகற்றிட உத்தரவிட்ட நீதிமன்ற பதிவாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நாற்காலிகளை தலைமீது வைத்துக்கொண்டு சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஒன்றிய அரசு, பிரதமர் மோடி, மணிப்பூர் முதல்வர், நீதிமன்ற பதிவாளர் ஆகியோரை கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின், செங்கல்பட்டு மைய மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chengalpattu ,Chenkalpattu ,Station ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை